அரசியல் நெருக்கடி சம்பந்தமான யோசனைகளை விரைவில் ஜனாதிபதியிடம் வழங்குவது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடி சம்பந்தமான யோசனைகளை விரைவில் ஜனாதிபதியிடம் வழங்குவது என அமைச்சர் விமல் வீரவங்ச தலைமையிலான 12 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
இந்த யோசனைகள் பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கும் வழங்கப்பட உள்ளன.
ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் அதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுக் கொண்ட பின்னர் யோசனைகளை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அமைச்சர் விமல் வீரவங்சவின் வீட்டில் கடந்த 11ஆம் திகதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த பேச்சுவார்ததையில் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் மட்டுமல்லாது தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.எம்.ஏ.அதாவுல்லாவும் கலந்து கொண்டுள்ளார்.
புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவது குறித்தும் இதன்போது பேசப்பட்டுள்ளது.
இந்த 12 அரசியல் கட்சிகளின் மற்றுமொரு கூட்டம் எதிர்வரும் 25ஆம் திகதி பொரள்ளையில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் நடத்தப்படவுள்ளது.
வாரந்தோறும் கட்சிகளின் தலைமையகத்தில் கூட்டங்களை நடத்துவது எனவும் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 21 மணி நேரம் முன்

அய்யனார் துணை, சிறகடிக்க ஆசை, சின்ன மருமகள் ஒன்று சேர்ந்த 3 சீரியல் நாயகிகள்.. என்ன விஷயம், வீடியோவுடன் இதோ Cineulagam
