இடமாற்றம் தராவிட்டால் போராட்டம் நடைபெறும்: வடக்கு மாகாண அரச சாரதிகள் சங்கம் எச்சரிக்கை
கடந்த ஐந்து வருடங்களாக தடைப்பட்டிருந்த சாரதிகளின் இடமாற்றமானது வேதனையளிப்பதாக வடக்கு மாகாண அரச சாரதிகள் சங்கத்தின் தலைவர் தவராசா துசாந் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண ஊடக அமையத்தில் நேற்று(03.02.2024) இடம்பெற்ற ஊடகவியாளர்கள் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இடமாற்றம்
மேலும், விண்ணப்பம் கோரப்பட்டு இடமாற்ற பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது. இருந்த போதிலும் கோரிக்கைக்கு இணங்க இடமாற்றம் நிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தினை சுட்டிக்காட்டி எதிர்வரும் 04.01.2024 தொடக்கம் 10.01.2024 வரையான ஏழு நாட்களும், 17.01.2024 தொடக்கம் 30.01.2024 வரையான 14 நாட்களும் கால அவகாசம் வழங்கி எமது இடமாற்றத்தினை நடைமுறைப்படுத்துமாறு பிரதி பிரதம செயலாளரிடம் கடிதம் மூலம் கேட்டிருந்தோம்.
இந்த காலப்பகுதிக்குள் இடமாற்றம் நடைமுறைக்கு வராதவிடத்து 05.02.2024 தொடக்கம் 10.02.2024 வரை தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.” என அரச சாரதிகள் சங்கத்தின் தலைவர் தவராசா துசாந் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு போட்டியா? ஹீரோவாக களமிறங்கும் இளம் இயக்குநர்.. யார் தெரியுமா Cineulagam
