மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்பிலிடப்படும் பணம் : ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் அறிவிப்பு
இந்த நாட்டில் வறுமையை ஒழிப்பதில் அஸ்வெசும திட்டம் வலுவான பங்களிப்பை வழங்கும் என்று நம்புகிறோம் என தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பயனாளிகளுக்கான நிதி நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வறுமை ஒழிப்பு செயற்றிட்டம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் விசேட செயற்றிட்டங்கள் மூலம் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமான நிலைக்குத் திரும்பியுள்ளதுடன் மக்களின் வறுமையை ஒழிப்பதில் விசேட கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.
நமது நாட்டில் வறுமையை போக்கவும், மக்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்கள் அவ்வப்போது செயல்படுத்தப்பட்டு வந்தன.
சமுர்த்தி வேலைத் திட்டம் பிரதான இடத்தைப் பெற்றதுடன், தற்போதைய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட அஸ்வெசும திட்டத்தின் ஊடாக அது மேலும் விரிவுபடுத்தப்பட்டது.
அஸ்வெசும திட்டம் அரசியல் சாராமல், தரவு அடிப்படையில் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தரவு அடிப்படையிலான ஆய்வுகள் மற்றும் கணக்கீடுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இறுதிப் பட்டியலின்படி, மக்கள் மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளைச் சமர்ப்பிக்க வாய்யப்பளிக்கப்பட்டுள்ளது.
பயனாளிகளுக்கான நிதி நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும்.
இந்த நாட்டில் வறுமையை ஒழிப்பதில் அஸ்வெசும வலுவான பங்களிப்பை வழங்கும் என்று நம்புகிறோம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சவால்விடும் சூழ்நிலைகளையும் கூலாக கையாளும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

Super Singer: தொகுப்பாளினி பிரியங்காவின் மானத்தை காப்பாற்றிய சிறுமி... பிரமிப்பில் நடுவர்கள் Manithan

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் Manithan
