சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை தொடர்வது குறித்து நளிந்த வெளியிட்ட அறிவிப்பு
தற்போதைய திட்டம் நிறைவடைந்த பின்னரே, சர்வதேச நாணய நிதியத்துடன் தொடர்பிலிருக்கும் உடன்படிக்கையை முன்னெடுத்துச் செல்வதா என்பது குறித்து அரசாங்கம் தீர்மானிக்கும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான எதிர்கால உடன்படிக்கைகள் குறித்து கருத்து தெரிவிப்பது தற்போது மிகவும் முன்கூட்டிய ஒன்றாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
பொருளாதார நிலைமை
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகள் உட்பட உலகளாவிய நிலவரங்கள் மற்றும் இலங்கையின் பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்த பின்னரே அரசாங்கம் இது குறித்து இறுதி தீர்மானத்தை எடுக்கும் என அவர் மேலும் விளக்கியுள்ளார்.

இந்த நிலையில் IMF திட்டத்தின் எதிர்காலம் குறித்த தனது முடிவை அரசாங்கம் அடுத்த ஆண்டுக்குள் (2027) அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தேர்தல் முடிய காத்திருக்கும் ட்ரம்ப்... மத்திய கிழக்கில் ரகசியமாகக் குவிக்கப்படும் இராணுவம் News Lankasri
இதெல்லாம் நிக்காது, எல்லாரும் எம்ஜிஆர், ஜோசப் விஜய் ஆகிட முடியாது! தனுஷ் பற்றி துரைமுருகன் Cineulagam