கடன் மறுசீரமைப்பு: ஜப்பானுடன் ஒப்பந்தத்த்தில் இணைந்த இலங்கை
இலங்கை அரசாங்கத்துக்கும், ஜப்பான் அரசாங்கத்திற்கும் இடையிலான வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறை தொடர்பில், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்துடன் இருதரப்பு திருத்த ஒப்பந்தம் ஒன்றில், இலங்கை கையெழுத்திட்டுள்ளது.
ஜப்பான் அரசாங்கம் இலங்கையின் வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையை முன்னெடுப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது, அத்துடன் பிரான்ஸ் மற்றும் இந்தியாவுடன் இணைந்து அதிகாரப்பூர்வ கடன் வழங்குநர் குழுவிற்கு தலைமை தாங்குகிறது.
கடன் மறுசீரமைப்பு
இந்த நிலையில்,, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகார அமைச்சகத்தில் இன்று(7) அதிகாரப்பூர்வ கையெழுத்து விழா நடைபெற்றது.
இந்தப் பரிமாற்றக் குறிப்புகளில் இலங்கை அரசின் சார்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவும், ஜப்பான் அரசின் சார்பாக இலங்கைக்கான ஜப்பான் தூதர் அகியோ இசோமாட்டாவும் கையெழுத்திட்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தெருக்களில் கிடந்த சடலங்கள்! உள்நாட்டில் வெடித்த கலவரம்..இரண்டு நாட்களில் 1000 பேர் பலி News Lankasri

புதிய தொடரில் கமிட்டாகியுள்ள சன் டிவி சீரியல் புகழ் மான்யா ஆனந்த்... எந்த தொலைக்காட்சி தொடர்? Cineulagam
