தோல்வியில் முடிந்த கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை: ஜனாதிபதி பணிக்குழாம் சுட்டிக்காட்டு
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை என ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி சாகல ரட்நாயக்க(Sagala Ratnayaka) தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடன் கொடுனர்களுடன் லண்டனில்(London) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டு விடயங்கள் தொடர்பில் இன்னமும் இணக்கப்பாடு காணப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம்
எனினும் எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு முன்னதாக இந்த விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடன் கொடுனர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது நான்கு விடயங்கள் தொடர்பில் பேசப்பட்டதாகவும் அதில் இரண்டு விடயங்கள் தொடர்பில் இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் போது பல்வேறு விடயங்கள் குறித்து ஏற்கனவே இணக்கம் காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
இலங்கை அண்மையில் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட அனைத்து சர்வதேச கடன் கொடுனர்களும் திருப்தி வெளியிட்டுள்ளதாக சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |