தேர்தல் ஒத்திவைப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரு நாள் விவாதம்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவது தொடர்பான விவாதத்தை மார்ச் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் இரண்டு நாட்கள் நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று (1) தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று (1) பிற்பகல் 1.30 மணியளவில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடிய போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்த கோரிக்கைக்கு அமைவாகவே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வஜன வாக்குரிமை

மார்ச் 9 மற்றும் 10ஆம் திகதிகளில் “சர்வஜன வாக்குரிமை” தொடர்பாக எதிர்க்கட்சியினர் கொண்டுவரும் சபை ஒத்திவைப்பு விவாதத்தை பி.ப 5.30 மணிவரை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
இந்த இரண்டு தினங்களிலும் மு.ப 9.30 மணி முதல் 10.30 மணிவரையான காலப் பகுதி வாய்மூல விடைகளுக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் பிற்போடப்பட்டமை தொடர்பில் நாட்டில் பலத்த எதிர்ப்பு நிலவி வருவதால், இது தொடர்பில் பரந்துபட்ட விவாதம் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam