வெலிசறை தடுப்புமுகாம் சிறைச்சாலைக் கைதிகளுக்கு மரண அச்சுறுத்தல்! பொலிசிலும் முறைப்பாடு

Sri Lanka Prisons in Sri Lanka Prison
By Aanadhi Oct 06, 2026 04:33 AM GMT
Report

கடற்படை பாதுகாப்பில் உள்ள வெலிசறை அதியுயர் பாதுகாப்பு தடுப்பு முகாம் சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போது சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுதேஷ் நந்திமால் மேற்குறித்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

வெலிசர கடற்படை முகாமுக்குள் அமைக்கப்பட்டுள்ள இந்த சிறைச்சாலையில் கடுமையான மற்றும் விசேட குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வெலிசர கடற்படை முகாமுக்குள் அமைக்கப்பட்டுள்ள அதியுயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு கடற்படை சிப்பாய் ஒருவர் மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

அவ்வாறான நிலையில் சிறைக் கைதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய நிலை உருவாகியுள்ளது.

சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்

கடந்த 28ஆம் திகதி கடற்படை சிப்பாய் ஒருவர், 'நீங்கள் சிறைச்சாலைக்கு பெரியவர்களாக இருக்கலாம் எங்களுக்கு நீங்கள் பெரியவர்கள் அல்ல. எனது கையில் ஆயுதம் கிடைத்தால் உங்கள் அனைவரையும் சுட்டுக்கொன்று விடுவேன்' என கைதிகளை அச்சுறுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கைதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமா என்ற நியாயமான அச்சம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு உணவு வழங்குதல், பாதுகாப்பு வழங்குதல் மற்றும் வெளியில் அழைத்துச் செல்லுதல் உள்ளிட்ட பணிகளில் கடற்படையினர் ஈடுபடுகின்றனர்.

வெலிசறை தடுப்புமுகாம் சிறைச்சாலைக் கைதிகளுக்கு மரண அச்சுறுத்தல்! பொலிசிலும் முறைப்பாடு | Death Threat To Prisoners At The Welisara Camp

கடந்த 23ஆம் திகதி சிறைச்சாலை தலைமையகத்தைச் சேர்ந்த அதிகாரியொருவர் தடிகள் மற்றும் தடிகளுக்கு ஒத்த பொருட்களுடன் சென்று, தேவையற்ற வகையில் நடந்துகொண்டால் சில விடயங்கள் இடம்பெறக்கூடும் என மறைமுகமாக அச்சுறுத்தியுள்ளார்.

கைதிகளை சந்திக்க குடும்பத்தினரும் சட்டத்தரணிகளும் பல மணிநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. வீடுகளில் இருந்து கொண்டுவரப்படும் உணவும் கடுமையான பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

கைதிகள் சிறைச்சாலை அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்து பொலிஸில் தெரிவிக்க அனுமதி கோரியபோதும். அவர் தானே முறைப்பாடு செய்வதாக கூறி நடவடிக்கை எடுக்கவில்லை.

எனினும் சிறைக் கைதியொருவரின் தாயார் இது குறித்து மஹபாகே பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதற்கிடையே சிறைச்சாலையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால் திட்டமிட்ட சதித்திட்டம் தொடர்பான சந்தேகம் எழுந்துள்ளது.

வெலிசறை தடுப்புமுகாம் சிறைச்சாலைக் கைதிகளுக்கு மரண அச்சுறுத்தல்! பொலிசிலும் முறைப்பாடு | Death Threat To Prisoners At The Welisara Camp

நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகள் கொல்லப்பட்ட சம்பவத்திலும் இதுவரை உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மெகசின் சிறைச்சாலையிலும் கைதி தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலைமையில் வெலிசர கைதிகளுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அது திட்டமிட்ட நடவடிக்கையாக இருக்கலாம். அரசாங்கமும் சிறைச்சாலைக்கு பொறுப்பான அமைச்சரும் உடனடியாக தலையிட்டு கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்து, குற்றம் செய்தவர்கள் எவராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்.

இல்லையெனில் சட்ட ரீதியான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்போம். சிறைச்சாலைகளில் கைதிகளின் உரிமைகள் மறுக்கப்படக்கூடாது.

அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் இருந்தாலும், சட்டத்தின் அடிப்படையிலேயே தண்டனை வழங்கப்பட வேண்டும். சட்டத்துக்கு அப்பால் சென்று ஒருவரின் உயிரை பறிப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை.

கடந்த கால சம்பவங்களை கருத்தில்கொண்டுஇ அதிகாரிகள் முன்கூட்டியே கிடைக்கும் எச்சரிக்கைகளை கவனத்தில் கொண்டு உடனடி விசாரணைகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டும்.

இந்த விடயத்தில் சிறைக் கைதிகளின் குடும்பத்தினரும் எங்களுடன் இணைந்து சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நள்ளிரவில் இரகசியமாக நாடு திரும்பிய ஷிரந்தி..! மீண்டும் FCID அழைப்பு - அடுத்தடுத்து சந்திக்கவுள்ள சிக்கல்

நள்ளிரவில் இரகசியமாக நாடு திரும்பிய ஷிரந்தி..! மீண்டும் FCID அழைப்பு - அடுத்தடுத்து சந்திக்கவுள்ள சிக்கல்

இரவோடு இரவாக நாட்டிற்குள் நுழைந்த ஷிரந்தி.. விரைவில் எஃப்.சி.ஐடியில் முன்னிலை

இரவோடு இரவாக நாட்டிற்குள் நுழைந்த ஷிரந்தி.. விரைவில் எஃப்.சி.ஐடியில் முன்னிலை

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US