மகிந்தவுக்கு உயிரச்சுறுத்தல்! வெளியான புலனாய்வு அறிக்கை - பொறுப்பு கூற வேண்டிய அநுர அரசாங்கம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இவ்வாறான பின்னணியில் இராணுவ பாதுகாப்பை இந்த அரசாங்கம் முழுமையாக நீக்கியுள்ளமை தவறான தீர்மானமாகும் என்று பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
மேலும், மகிந்த ராஜபக்சவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும் இந்த அரசாங்கம்தான் ஏற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பாதுகாப்பு தரப்பினரின் அறிக்கை
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பிரபுக்களின் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறித்து பாதுகாப்பு தரப்பினரிடம் அறிக்கை பெற்றுக் கொண்டுள்ளது.
இதற்கமைய 2024.10.10 ஆம் திகதியன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.டி.விக்ரமசிங்க மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பில் மீளாய்வு குழுவுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
அந்த அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறித்து புலனாய்வு பிரிவினர் சமர்ப்பித்த 13 அறிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 2024 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட 04 புலனாய்வு பிரிவின் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு ஏன் பலப்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான காரணிகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
அதிகரிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினால் ட்ரோன் கருவி ஊடான குண்டுத்தாக்குதல் நடத்தப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும், அத்துடன் அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அரச சார்பற்ற அமைப்புக்களினால் திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியம் இருப்பதாகவும் புலனாய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பில் புலனாய்வு பிரிவு சமர்ப்பித்த அறிக்கைகளை கவனத்திற் கொள்ளாமல் அரசாங்கம் முறையற்ற வகையில் இராணுவ பாதுகாப்பை முழுமையாக நீக்கியுள்ளது.
மகிந்த ராஜபக்சவுக்கு 100 அல்ல 1000 இராணுவத்தினரை பாதுகாப்புக்கு அமர்த்தினாலும் குறையேதுமில்லை. ஏனெனில் இராணுவத்தினர் தமது சொந்த ஊருக்கு சவப்பெட்டியில் செல்லும் காலத்தை அவர் தான் முடிவுக்கு கொண்டு வந்தார்.
முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க ஆகியோருடன் மகிந்த ராஜபக்சவை ஒப்பிட முடியாது. ஏனெனில் மகிந்த ராஜபக்ச தேசியத்தை பாதுகாப்பதற்காக கடுமையான தீர்மானங்களை எடுத்தார்.
ஆகவே மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக பிரிவினைவாத சக்திகள் தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் இன்றும் செயற்படுகின்றன. மகிந்த ராஜபக்சவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அரசாங்கம் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
you may like this

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
