நெடுந்தீவில் இருந்து இறைச்சியுடன் வந்த பொலிஸ் அதிகாரி! மடக்கிப்பிடித்த இளைஞர்கள்
நெடுந்தீவில் இருந்து விடுமுறையில் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் கொண்டு சென்ற பொதியை குறிகாட்டுவானில் வைத்து சோதனையிட்ட போது, அதில் இறைச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கிவந்த படகில் விடுமுறையில் செல்வதற்காக வந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொண்டுவந்த பொதியில் இறைச்சி இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
விசாரணைகள்
இதனையடுத்து, குறிகாட்டுவான் துறைமுகப் பகுதியில் வைத்து, கடந்த பல நாட்களாக கால்நடைகளை பறிகொடுத்த இளைஞர்கள் கடற்படையினரின் உதவியுடன் சோதனை செய்த போது, பொதியில் இறைச்சி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் குறித்த பொதியுடன் பொலிஸ் அதிகாரியை குறிகாட்டுவானில் கடற்படையினரின் உதவியுடன் தடுத்து வைத்துவிட்டு யாழ். அரச அதிபர் மற்றும் நெடுந்தீவு பிரதேச செயலருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது,
அத்துடன், இது தொடர்பாக வேலணை பிரதேச செயலருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதாக தெரியவருகின்றது. இதன் அடிப்படையில், ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் குறிகாட்டுவான் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பற்றுச்சீட்டு
நெடுந்தீவில் ஆடு காணாமல் போன இளைஞரிடம் முறைப்பாட்டினை பெற்றதுடன் கைப்பற்றப்பட்ட இறைச்சியினை ஆட்டிறைச்சியா மாட்டிறைச்சியா என ஆய்வு செய்தபின்னர், நாளையதினம் தகவல் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட பொலிஸ் அலுவலர் கடையில் மாட்டு இறைச்சியை வாங்கிய பற்றுச்சீட்டினை தனது கைவசம் வைத்திருந்தார்.
இந்நிலையில், இறைச்சியை வாங்கிய பின்னர் அவர் விடுமுறையில் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam

முகேஷ் அம்பானியின் ரூ 15000 கோடி Antilia மாளிகையின் முதல் மின் கட்டணம் எவ்வளவு தெரியுமா? News Lankasri

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
