மரண தண்டனை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துமாறு மனித உரிமை மீறல் மனுக்கள் தாக்கல்
இலங்கையில் மரண தண்டனை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துமாறு சிரேஸ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவின் சட்ட நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட 12 மனித உரிமை மீறல் மனுக்கள் இன்றைய தினம் உயர் நீதிமன்றில் ஐவர் அடங்கிய நீதிபதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் சார்பில் ' இலங்கையின் எந்தவொரு நீதிமன்றமும் மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி கையொப்பம் இடப்போவதில்லை என தீர்மானித்துள்ளதாக உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது.
வழக்கு தள்ளுபடி
இதனையடுத்து' மனுதாரர் சார்பில் முன்னிலையாகிய ஜனாதிபதி சட்டத்தரணிகள் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணிகளின் வேண்டுகோளுக்கு இணங்க வழக்கு நடவடிக்கையை தற்காலிகமாக தள்ளுபடி செய்துள்ளதுடன், வேண்டிய நேரம் வழக்கை மீள் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கும் உயர் நீதிமன்றின் நீதிபதியரசர்கள் கட்டளை வழங்கியுள்ளனர்.
சிரேஸ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசாவின் சட்ட நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட 12 மனித உரிமை மீறல் மனுக்களின் மனுதாரார் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜெயவர்த்தன, சிரேஸ்ட சட்டத்தரணி புலஸ்தி ஹேவமான்ன,கௌரி சங்கரி தவராசாவின் சட்ட நிறுவனத்தின் சார்பில் சட்டத்தரணி தர்மராஜா தர்மஜா மற்றும் சட்டத்தரணி தர்சிகா தர்மராசா ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

இரண்டு உசுரு எடுத்தாச்சு.. மகிழ்ச்சியில் குணசேகரன் டீம்! ஆனால் தர்ஷன் கொடுத்த ஷாக்.. நாளைய ப்ரோமோ Cineulagam

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
