ஆயுத கடத்தல் தலைவராக சம்பத் மனம்பேரி! விசாரணைகளில் திடுக்கிடும் தகவல்
கெஹெல்பத்தர பத்மேவின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி போதைப்பொருள் உற்பத்தி நடவடிக்கையின் தலைவராக மாத்திரம் அல்லாமல் ஆயுத கடத்தல் வலையமைப்பின் தலைவராகவும் செயல்பட்டதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டுகள் உட்பட பல ஆயுதங்கள் ஏற்கனவே பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கைக்குண்டுகள் உட்பட பல ஆயுதங்கள் பாதாள உலக குழுக்களுக்கு சொந்தமானவை என்றும் பொலிஸாரால் நம்பப்படுகிறது.
தொடர்புடைய சந்தேக நபர்கள்
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கண்டுப்பிடித்து கைது செய்ய பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரியுடன் தொடர்புடைய நபர்களின் வீடுகளும் பொலிஸாரால் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், கெஹெல்பத்தர பத்மேவுடன் நெருங்கிய தொடர்பை வைத்திருந்த கம்பஹா குற்றப் புலனாய்வுப் பிரிவில் இணைக்கப்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவரும் அண்மையில் குற்ற புலனாய்வு அதிகாிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 6 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
