இராமநாதன் கல்லூரி மாணவியின் மரணம்: ஒரு வருடமாகியும் முடியாத விசாரணை - கடுமையாக சாடும் ஜோசப் ஸ்டாலின்

Colombo School Children Joseph Stalin
By Rakesh Jul 01, 2026 05:46 AM GMT
Report

இலங்கையில் அண்மைக் காலமாக சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் துஷ்பிரயோகங்களும் அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பான நீதிமன்ற விசாரணைகளில் நிலவும் மந்தகதி மற்றும் தாமதங்கள் குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கடுமையான அதிருப்தியையும் கவலையையும் வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் ஊடகங்களிடம் நேற்று(30.06.2026) கருத்து வெளியிடும் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் மகனின் பெரும் கடத்தல் மோசடி அம்பலம் - சிஐடிக்கு கசிந்த தகவல்

முன்னாள் ஜனாதிபதியின் மகனின் பெரும் கடத்தல் மோசடி அம்பலம் - சிஐடிக்கு கசிந்த தகவல்

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது

மேலும் சுட்டிக்காட்டியதாவது, "கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி கொட்டாஞ்சேனை பகுதியில் கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி மாணவியான தில்ஷி அம்சிகா என்ற சிறுமி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பாடசாலை மாணவி ஒருவருடன் தொடர்புடைய மிக மோசமான சம்பவமாகும்.

இந்தச் சம்பவம் நடந்து ஒரு வருடத்துக்கும் மேலாகியும், இதற்கான மரண பரிசோதனை இன்னும் முடிவடையவில்லை.

இராமநாதன் கல்லூரி மாணவியின் மரணம்: ஒரு வருடமாகியும் முடியாத விசாரணை - கடுமையாக சாடும் ஜோசப் ஸ்டாலின் | Death Of Ramanathan College Student Investigation

நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்ற மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும், அது குறித்த இறுதித் தீர்ப்பு வரும் ஆகஸ்ட் 7ஆம் திகதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை வரவுப் புத்தகங்கள் போன்ற ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், இறுதி சிசிரிவி காட்சிகளின் அறிக்கை இன்னும் முழுமையாக கிடைக்கப்பெறாத நிலையில், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை செப்டெம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விரைவாக நீதி கிடைக்க

இத்தகைய முக்கிய வழக்குகளில் நிலவும் மந்தகதி மற்றும் பொலிஸாரின் தாமதம் பெரும் வேதனையளிக்கின்றது. சிறுவர் விவகார அமைச்சரின் கூற்றுப்படி, கடந்த சில மாதங்களில் மட்டும் 1,413 சிறுவர்கள் மற்றும் பெண்கள் பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

இராமநாதன் கல்லூரி மாணவியின் மரணம்: ஒரு வருடமாகியும் முடியாத விசாரணை - கடுமையாக சாடும் ஜோசப் ஸ்டாலின் | Death Of Ramanathan College Student Investigation

இதில் 498 வழக்குகள் பாலியல் துஷ்பிரயோகம் சார்ந்தவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய குற்றங்கள் நாட்டில் தொடர்ந்து அதிகரிப்பதற்குக் காரணம், வழக்கு விசாரணைகளில் ஏற்படும் கடுமையான தாமதங்களும், உரிய சட்டக் கோப்புகளில் பொலிஸ் மற்றும் நீதித்துறை எடுக்கும் காலதாமதங்களுமே ஆகும்.

கடந்த மே மாத தொடக்கத்தில், பிரதமரின் அறிவுறுத்தலின் கீழ் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் சுகாதார அமைச்சர் உள்ளிட்டோர் அடங்கிய விசேட குழு அமைக்கப்பட்டு இது குறித்து ஆராயப்பட்ட போதிலும், இன்னமும் நடைமுறையில் மந்தகதியான போக்கே காணப்படுகின்றது.

எனவே, பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டுமாயின், விசாரணைகளை உடனடியாக விரைவுபடுத்த வேண்டும்.

கல்வி அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இதில் தலையிட்டு, எதிர்காலத்தில் இத்தகைய குற்றங்கள் நிகழாமல் தடுக்கக் கடுமையான மற்றும் விரைவான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் சோகம் : கூரை இடிந்து விழுந்ததில் 14 சிறுவர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தானில் சோகம் : கூரை இடிந்து விழுந்ததில் 14 சிறுவர்கள் உயிரிழப்பு

இலங்கையில் தொடரும் சோகம் - நான்கு மாணவர்கள் சடலங்களாக மீட்பு - மரணத்திற்கான காரணம்

இலங்கையில் தொடரும் சோகம் - நான்கு மாணவர்கள் சடலங்களாக மீட்பு - மரணத்திற்கான காரணம்

மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US