சற்றுமுன்னர் மட்டக்களப்பில் பேருந்துகள் மோதி விபத்து - கடையொன்று சேதம்
மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடிக்கு அருகில் உள்ள களுதாவளை கடற்கரை வீதி சந்தியில் தனியார் பேருந்து ஒன்றும் அரச பேருந்து ஒன்றும், ஒன்றுக்கு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்று(30.09.2026) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகள் மோதி விபத்து
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
திருகோணமலையில் இருந்து கல்முனை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும், அரச பேருந்து ஒன்றும் போட்டிப் போட்டி பயணித்த பொழுது ஒன்றுக்கு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

விபத்தின் பொழுது பயணிகள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், விபத்தின் விளைவாக அரச பேருந்து அருகில் இருந்த கடையொன்றில் மோதியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.