பாகிஸ்தானில் சோகம் : கூரை இடிந்து விழுந்ததில் 14 சிறுவர்கள் உயிரிழப்பு
கிழக்கு பாகிஸ்தானின் லாகூர் நகரில் உள்ள ஒரு பயிற்சி மையத்தின் கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 14 சிறுவர்கள் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு ஆசிரியர் மற்றும் மேலும் எட்டு சிறுவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுமானத்தின் தரம் குறைவு
இந்நிலையில், அந்த மையத்தின் உரிமையாளரும் மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

உயிரிழந்த சிறுவர்களின் வயது சுமார் நான்கு முதல் 12 வரை இருந்ததாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இடிபாடுகளுக்கு அடியில் மேலும் சிறுவர்கள் சிக்கியிருக்கக்கூடும் என்ற தகவல்கள் கிடைத்ததை அடுத்து, மீட்புக் குழுவினர் இடிபாடுகளுக்குள் தேடி வருவதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஃபைசல் கம்ரான் கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த மையம் ஒரு பழைமையான கட்டிடத்தில் அமைந்திருப்பதாகவும், கட்டுமானத்தின் தரம் குறைவாக இருந்ததன் காரணமாகவே கட்டி முடிக்கப்படாத இரண்டாவது மாடியின் கூரை இடிந்து விழுந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 20 மணி நேரம் முன்
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan