மனிதர்கள் - யானைகளின் பலி எண்ணிக்கை அதிகரிப்பு!
நாட்டின் யானை தாக்குதல் மற்றும் மனித செயற்பாடுகள் காரணமாக மனிதர்கள் மற்றும் யானைகளின் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் இந்த உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளது.
காட்டு யானை தாக்குதல் காரணமாகக் கடந்த மூன்று மாதங்களில் 20க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
20க்கும் மேற்பட்ட நபர்கள்
அத்துடன், கடந்த 3 மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் பலியானதாகவும் வனஜீவராசிகள் திணைக்களத் தரவுகள் தெரிவிக்கின்றன.
குறித்த யானைகள், மனித செயற்பாடுகள் மற்றும் தொடருந்து விபத்துகள் போன்ற காரணத்தால் மரணமடைந்துள்ளதாகத் தரவுகள் பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டு 439 யானைகள் உயிரிழந்ததுடன், காட்டு யானை தாக்குதல் காரணமாக 140 மனிதர்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.