இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட மகனை தேடியழைந்த தந்தை மரணம்
வவுனியாவில் காணாமல்போன தனது மகனைத் தேடிவந்த தந்தை ஒருவர் இன்று மரணமடைந்துள்ளார்.
வவுனியா - மதியாமடு, புளியங்குளம் பகுதியை சேர்ந்த செபமாலை இராசதுரை (வயது 73) என்ற தந்தையே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.
இவரது மகன் இராசதுரை விஜி 2009ம் ஆண்டு இறுதி யுத்த முடிவின் போது 2009.05.24 அன்று ஓமந்தை சோதனைச் சாவடியில் வைத்து இராணுவத்தினர் கைது செய்து, குடும்பத்தினரிடமிருந்து தனியாக பிரித்து அழைத்து சென்றிருந்த நிலையில், கடந்த 12 ஆண்டுகளாக மகன் பற்றிய நம்பகரமான தகவல் ஏதும் அறியாமலேயே மரணமடைந்தார்.
வவுனியாவில் 1668 நாட்கள் கடந்தும் நடைபெற்று வரும் "காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கேட்கும் தொடர் போராட்டத்தில் குறித்த தந்தை கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடிப்பதற்காக தொடர்ச்சியாக போராடியிருந்தார்.
இந்நிலையில் 27 வயதில் காணாமல் ஆக்கப்பட்ட மகனை காணாமலேயே அவர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 19 மணி நேரம் முன்
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan