இறந்து பிறந்த குழந்தை மயானத்தில் கண்விழித்து அழுததால் பரபரப்பு!
வைத்தியசாலையில் இறந்து பிறந்ததாக தெரிவிக்கப்பட்ட குழந்தையை அடக்கம் செய்வதற்காக மயானத்திற்கு கொண்டு சென்றவேளை அங்கு குழந்தை திடீரென கண்விழித்து அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - அசாம் மாநிலத்தின் கச்சார் மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பெண்ணொருவருக்கு பிரசவவலி ஏற்படவே அவரது கணவர் அவரை தனியார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை ஆரம்பம்: யாழ் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி - செய்திகளின் தொகுப்பு
பிளாஸ்டிக் கவரில் குழந்தை
அங்கு மருத்துவர்கள், தாய் அல்லது குழந்தை யாராவது ஒருவரை மட்டுமே காப்பாற்ற முடியும் என தெரிவித்துள்ளனர். இதன்படி அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. தாய் நலமாக இருப்பதாகவும், குழந்தை இறந்தே, பிறந்ததாகவும் மருத்துவர்கள் கூறினர்.
பின்னர் மறுநாள் காலை அந்த ஆண் குழந்தையை ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு, இறப்பு சான்றிதழுடன் குடும்பத்தினரிடம் வைத்தியசாலை நிர்வாகம் ஒப்படைத்தது.
அதனை தொடர்ந்து, இறுதி சடங்குக்காக குழந்தையை மயானத்துக்கு கொண்டு சென்ற குடும்பத்தினர் பிளாஸ்டிக் கவரில் இருந்து குழந்தையை வெளியே எடுத்தனர்.
அப்போது குழந்தை அழ தொடங்கியது. இதை கண்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ந்து போயினர்.
வைத்தியசாலை நிர்வாகம் மீது நடவடிக்கை
உடனடியாக குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். தற்போது அந்த குழந்தை நலமாக உள்ளது.
இதனிடையே குழந்தை இறந்துவிட்டதாக கூறிய தனியார் வைத்தியசாலை முன்பு திரண்ட பொதுமக்கள் வைத்தியசாலை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |