கொழும்பில் மற்றுமொரு பேருந்து - கொள்கலன் விபத்து: 22 பேர் காயம்
கொழும்பில் தனியார் பேருந்து மற்றும் கொள்கலன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு பிரதான வீதியில் கஜுகம பிரதேசத்தில் இன்று (06.10.2023) அதிகாலை 5 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நேருக்கு நேர் மோதி
அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தும் கொழும்பில் இருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த கொள்கலனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து இடம்பெற்ற அதேநேரம் பேருந்தின் பின்னால் வந்த எரிபொருள் பவுசரும் பேருந்துடன் மோதியது.
இந்த விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளதுடன் 4 பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் காயமடைந்தவர்கள் வட்டுபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
