படுகொலை செய்யப்பட்ட யாழ். போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 36ம் ஆண்டுநினைவேந்தல்(Photos)
இந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட யாழ் போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 36 ஆவது நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
1987 ம் ஆண்டு இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியசாலை பணியாளர்கள் 21 பேர் உள்ளிட்ட 68 பேர் சுட்டு படுகொலை செய்யப்பட்டதுடன் பலரும் காயமடைந்தனர்.
சுட்டுக்கொல்லப்பட்டவர்களின் 36 வது நினைவு தினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம்(21.10.2023) நினைவு கூரப்பட்டுள்ளது.
உறவினர்களின் நினைவேந்தல்
குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்கள், வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் நினைவேந்தலில் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த நினைவேந்தலில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு உயிரிழந்தோருக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு உயிரிழந்தவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டு நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது.

விடுதலைப் புலிகளின் தலைவருக்கு இலங்கையின் ஒரு பகுதியை கொடுத்திருந்தால்..! இன்றைய நிலையை விபரிக்கும் ராஜித
















மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
