உலகின் சிறந்த முதல் 2 வீத விஞ்ஞானிகளின் தரவரிசையில் இடம் பெற்ற யாழ். பல்கலை பேராசிரியர்கள்
அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகமும் எல்செவியர் (Elsevier) நிறுவனமும் இணைந்து வெளியிட்டுள்ள உலகின் சிறந்த 2 வீத விஞ்ஞானிகளின் தரவரிசையில் முப்பத்தெட்டு இலங்கை விஞ்ஞானிகளும் ஆய்வாளர்களும் இடம்பெற்றுள்ளனர்.
இந்தப் பட்டியலில் இலங்கையிலிருந்து உள்ளடக்கப்பட்டிருப்போரில் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்தவர்களான பேராசிரியர் நவரட்ணராஜா சதிபரன், கலாநிதி ரி.மதனரஞ்சன் ஆகிய இருவரும் இடம் பெற்றுள்ளனர்.
தர வரிசைப் பட்டியல்
பணிநாள் மற்றும் வருடாந்த அடிப்படையில் விஞ்ஞானிகளைப் பல்வேறு காரணிகளைக் கொண்டு தர வரிசைப் படுத்தி இந்தப் பட்டியல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், 22 அறிவியல் துறைகள் மற்றும் 176 துணைத்துறைகளில் இருந்து விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பட்டியலில் இணைக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா.. காதலனை பற்றி முதல் முறையாக கூறிய நடிகை Cineulagam

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri
