கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் பலி! மற்றுமொருவர் படுகாயம்
சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட போது கசிப்பு பெரல் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவு வளத்தாப்பிட்டியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் வளத்தாப்பிட்டியைச் சேர்ந்து 56 வயதுடைய ஏகாம்பரம் தங்கவேல் என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.
குறித்த பிரதேசத்திலுள்ள வயலுக்கு நீர் செல்லும் ஓடங்கரை வாய்க்கால் கரையில் தந்தையும் மகனும் அவர்களுடன் உறவினர் ஒருவர் உட்பட 3 பேர் சம்பவதினத்தன்று அதிகாலையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
சம்பவம் குறித்து வீட்டில் தாயாருடன் தகராறு காரணமாக தீயிட்டுக் கொண்டதாக பொய்யான தகவலை தெரிவித்து சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டு உறவினர் தலைமறைவாகியுள்ளார் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
