ஆற்றில் தவறி வீழ்ந்த சிறுவன் சடலமாக மீட்பு
காத்தான்குடியில் ஆற்றில் தவறி விழுந்த சிறுவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
காத்தான்குடி-05, ஊர் வீதியைச் சேர்ந்த குறித்த சிறுவன் காலை வேளையில் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
ஆற்றங்கரை பகுதியை நோக்கி தனியாக நடந்து சென்றுள்ள நிலையில், அங்கு றின்றபோது தவறிய சிறுவன் நீரில் வீழ்ந்துள்ளார்.
ஆற்றில் தேடுதல் நடவடிக்கை
இதற்கிடையில் சிறுவனை காணவில்லை என பெற்றோர்கள் பொது மக்களுடன் இணைந்து தேடி வந்துள்ளனர்.
இதன்போது காத்தான்குடி ஆற்றங்கரை அண்மித்த பகுதியில் காணப்பட்ட சிசிடிவி கமெராவில் சிறுவன் தனியாக நடந்து வரும் காட்சிகள் பதிவாகியிருந்தன.
இதனை வைத்து கொண்டு பிரதேச இளைஞர்கள் ஆற்றில் தேடல் நடவடிக்கையில் ஈடுபட்டபோது, சிறுவன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கொத்துக் கொத்தாக ஆடைகள் இன்றி புதைக்கப்பட்ட தமிழர்கள்: செம்மணி தொடர்பில் வெளியாகும் அதிர்ச்சி தகவல்!
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
