காத்தான்குடியில் விசேட சுற்றிவளைப்பு : 42பேர் அதிரடியாகக் கைது
ஐஸ், கேரளா கஞ்சா,, சிகரெட் மற்றும் பெருமளவிலான கசிப்பு போதைப்பொருளுடன் 42 பேர் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
57லீற்றர் கசிப்புடன் 25 பேரும், ஐஸ் போதை பொருளுடன் நால்வரும், கேரளா கஞ்சாவுடன் எட்டு பேரும் சிகரெட்டுடன் ஒருவரும் ஏனைய குற்றச் செயல்களில் ஈடுபட்ட நால்வருமாக 42 பேர் இவ்வாறு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலை
காத்தான்குடி பொலிஸ் பிரிவு உட்பட்ட கர்பலா, கல்லடி, புதிய காத்தான்குடி, தாழங்குடா, கிரான் குளம் உட்பட பல பிரதேசங்களில் பொலிஸார் நடாத்திய திடீர் சுற்றிவளைப்பு தேடுதல்களின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் இன்று(24) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



பதினாறாவது மே பதினெட்டு 5 நாட்கள் முன்

இந்தியாவிடம் பின்னடைவு... கடும் நெருக்கடியில் இருக்கும் பாகிஸ்தான் எடுத்துள்ள அந்த முடிவு News Lankasri
