கோவிட் நிமோனியா கறுப்பு பூஞ்சை தொற்றால் இலங்கையில் இறந்துள்ள முதல் நபர்
கோவிட் நிமோனியா மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட கறுப்பு பூஞ்சை தொற்று காரணமாக இலங்கையில் முதலாவது மரணம் சம்பவித்துள்ளதாக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் சட்ட வைத்திய பிரிவின் பிரதானி விசேட சட்ட வைத்திய அதிகாரி ரொஹான் ருவான்புர தெரிவித்துள்ளார்.
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கோவிட் நிமோனியா காரணமாக ஒருவர் கடந்த செப்டெம்பர் 29ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபரின் மாதிரிகள் மேலதிக ஆய்வுக்காக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு கடந்த செப்டெம்பர் 29ஆம் திகதியே அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த ஆய்வின் அறிக்கை நேற்று கிடைத்த நிலையில் ஆய்வு அறிக்கைக்கு அமைய உயிரிழந்தவரின் நுரையீரலில் கறுப்பு பூஞ்சை தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ரொஹான் ருவான்புர குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பூஞ்சைகள் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் திரிமாலி ஜயசேகர ஆராய்ச்சியை நடத்தியுள்ளார்.
இலங்கையில் கோவிட் நிமோனியா மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட கறுப்பு பூஞ்சை தொற்று காரணமாக உயிரிழந்த நபரின் மரணம் சம்பந்தமாக நடத்தப்பட்ட முதலாவது பிரேத பரிசோதனை இதுவாகும் எனவும் விசேட சட்ட வைத்திய அதிகாரி கூறியுள்ளார்.
உயிரிழந்த நபரின் பிரேத பரிசோதனைகளை கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் உதவி சட்ட வைத்திய அதிகாரி சமாதி தந்தெனிய நடத்தியுள்ளார்.
எம்பிலிப்பிட்டிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசித்து வந்த 56 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri