ஹட்டனில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்பு
ஹட்டன் பேருந்து தரப்பிடத்தில் இனம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஹட்டன் - கொழும்பு - கண்டி பிரதான வீதியின் மல்லியப்பூ சந்தி பகுதியில் அமைந்துள்ள பேருந்து தரிப்பிடத்தினிலே இந்த அடையாளம் தெரியாத நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சடலம் இன்று (16.07.2023) காலை மீட்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேருந்து தரிப்படத்தில் காயங்களுடன் நபர் ஒருவர் கீழே விழுந்து கிடப்பதாக அந்த இடத்திற்கு சென்ற பயணி ஒருவர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
ஹட்டன் பொலிஸார் விசாரணை
அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
நேற்றைய தினம் (15.07.2023) மாலை வேளையில் இருந்து குறித்த நபர் அந்தப் பகுதியில் சஞ்சரித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த ஆண் தொடர்பில் வேறு எந்த விபரங்களும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
