புத்தளத்தில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட ஆமை (Photos)
புத்தளம் கலப்பில் உயிரிழந்த நிலையில் கடலாமையொன்று மீட்கப்பட்டுள்ளது.
புத்தளம் கலப்பில் உரைப்பையொன்று நேற்று சந்தேகத்திற்கிடமாக காணப்பட்டுள்ளதை புத்தளம் பொலிஸார் அவதானித்துள்ளனர்.
இந்த உரைப்பை சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது உயிரிழந்த நிலையில் கடலாமையொன்று காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உடற்கூற்றுப் பரிசோதனை
இதனையடுத்து புத்தளம் தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரியினால் புத்தளம் வனஜீவராசிகள் பிராந்திய திணைக்களத்தினருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
தகவலின் அடிப்படையில் புத்தளம் பகுதிக்கு வனஜீவராசிகள் திணைக்களத்தினர் சென்று உயிரிழந்த கடலாமையை மீட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட கடலாமைக்கு வைத்தியர் இசுருவினால் உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்படுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட ஆமையின் தலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கபட்டிருப்பதாகவும் ஆமையின் தலையில் பாரிய காயங்கள் காணப்பட்டதாகவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வனஜீவராசிகளின் சந்தேகம்
கடலாமையை இறைச்சிக்காக கொன்றிருக்கலாமென வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கடலாமை 30 கிலோகிராம் எடைக் கொண்டதாகக் காணப்படுவதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.






பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri

மோகன்லால் படத்தை பின்னுக்கு தள்ளி, மலையாளத்தில் நம்பர் 1 இடத்தை பிடித்த லோகா!! மாபெரும் வசூல் சாதனை Cineulagam
