அம்பாறையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள்
அம்பாறை (Ampara) மாவட்டம் மருதமுனை -பாண்டிருப்பு இடைப்பட்ட பகுதிகளில் இரண்டு பெரிய கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
கடற்கரைக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் இன்று (20) காலை உயிரிழந்த நிலையில் ஆமைகள் கரை ஒதுங்கியுள்ளதை அவதானித்துள்ளனர்.
இவ்வாறு கரையொதுங்கியுள்ள இரண்டு கடலாமைகளும் சுமார் 3 அடி நீளமும் 25 தொடக்கம் 50 கிலோ கிராம் எடை கொண்டதாகும் எனவும் ஆழ் கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக கடலாமைகள் கரையொதுங்கி வருவதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மாவட்டத்தின் கரையோரப் பகுதிகள்
குறித்த கடலாமைகள் இரண்டும் ஒலிவ் வகையைச் சார்ந்தது என தெரிவிக்கப்படுகிறது.
இதே போன்று கடந்த வாரமும் பெரிய நீலாவணை பகுதியிலும் பெரிய கடலாமையொன்று இறந்த நிலையில் கரையொதுங்கி இருந்தது.
இதனையடுத்து ஆமை ஒன்று உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளதாக அப்பகுதி மக்கள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் உத்தியோகத்தர்களுக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளில் அண்மையில் கடலாமைகள், டொல்பின்கள் உயிரிழந்த நிலையில் கரையொதிங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகைக்கும், இந்த பிரபலத்திற்கும் மறுமணமா?... வெளிவந்த தகவல் Cineulagam
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
லண்டன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 2 மாணவர்கள் நிலை கவலைக்கிடம்: 13 வயது சிறுவன் கைது News Lankasri