மட்டக்களப்பு பிரதான குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் போக்குவரத்துகள் பாதிப்பு

Sri Lanka Army Sri Lanka Police Batticaloa Climate Change Eastern Province
By Kumar Jan 20, 2025 11:08 AM GMT
Report

மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் பெய்துவரும் மழை காரணமாக பிரதான குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் பல பகுதிகளின் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பிரதான குளங்களின் ஒன்றான நவகிரி குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளின் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மண்டூர்-வெல்லாவெளி பிரதான போக்குவரத்துப்பாதையின் ஊடாக வெள்ளம் பாய்வதன் காரணமாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளன.

முப்படையினரின் உதவி : அரசாங்கத்தின் தீர்மானம்

முப்படையினரின் உதவி : அரசாங்கத்தின் தீர்மானம்

பாதுகாப்பு கடமை

இன்று காலை போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் உள்ள அலுவலகங்களுக்கு கடமைக்கு செல்லும் அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் ஊடாக உழவு இயந்திரங்கள் மூலம் போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு பிரதான குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் போக்குவரத்துகள் பாதிப்பு | Traffic Affected Opening Floodgates In Batticaloa

போரதீவுப்பற்று பிரதேசசபையின் செயலாளர் எஸ்.பகீரதனின் தலைமையில் இந்த போக்குவரத்துச்சேவை முன்னெடுக்கப்பட்டதுடன் குறித்த பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சீரற்ற வானிலையால் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

சீரற்ற வானிலையால் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிப்பு

போக்குவரத்துகள் பாதிப்பு

இதேபோன்று பாலையடிவட்டை-வெல்லாவெளி பிரதான வீதி, மண்டூர்-ராணமடு வீதி,வெல்லாவெளி - உகன வீதி போன்றன வெள்ளம் காரணமாக போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு பிரதான குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமையால் போக்குவரத்துகள் பாதிப்பு | Traffic Affected Opening Floodgates In Batticaloa

உன்னிச்சையின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணாக வவுணதீவுப்பகுதிக்கான பல்வேறு போக்குவரத்துப்பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,  திங்கட்கிழமை காலை 6 மணிவரையில் நவகிரிக் குளத்தின் நீர்மட்டம் 31.அடி 5அங்குலம், உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 32அடி 8 அங்குலம், உறுகாமம் குளத்தின் நீர்மட்டம் 18அடி 3அங்குலம், கட்டுமுறிவுக் குளத்தின் நீர்மட்டம் 12அடி 6அங்குலம், கித்துள்வெவ குளத்தின் நீர்மட்டம் 12அடி 3அங்குலம், வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர்மட்டம் 16அடி 11அங்குலம், வடமுனைக்குளத்தின் நீர்மட்டம் 13அடி 5அங்குலமாகவும் உயர்ந்துள்ளதாகவும் அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்பாசனப் பொறியிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிடத்தக்கது.

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதிமொழி

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதிமொழி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US