மர்மமான முறையில் உயிரிழந்த நபரின் சடலம் மீட்பு
பன்னிபிட்டிய, மலபல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டின் மேல் மாடியிலுள்ள குளியலறையில் மூன்று நாட்களுக்கு முன்னர் மர்மமான முறையில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் நபரொருவரின் சடலமே கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்த விடயம்

காலையில் உண்ணாவிரதத்தில் இருந்து மதியம் மீன் சந்தையில் நின்ற தலைவர் : சிவாஜிலிங்கம் விடுத்துள்ள சவால்
ஹோமாகம டென்சில் கொப்பேகடுவ மாவத்தையைச் சேர்ந்த சுதத் சிந்தன ரூபசிங்க (39) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவர் தனியார் வங்கியொன்றின் நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவர் வசித்த அறையில் இருந்து கடும் துர்நாற்றம் வீசிய நிலையில் அது தொடர்பில் நபர் ஒருவர் 119 என்ற அவசர இலக்கத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.
விசாரணை முன்னெடுப்பு
இந்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் வந்து அறையின் ஜன்னலை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சடலம் மீட்பதை கண்டு அதனை மீட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




