மட்டக்களப்பில் வீடொன்றிலிருந்து தீயில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு - வாகரையிலுள்ள வீடொன்றிலிருந்து தீயில் எரிந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாகபுரம், பால்சேனையைச் சேர்ந்த 64 வயதுடைய பூமணஜதேவி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் சம்பவதினமான நேற்று இரவு குப்பி விளக்கு ஒன்றை எரிய வைத்து விட்டு அதற்கு அருகில் ஆழ்ந்த நித்திரையில் இருந்த போது குப்பிவிளக்கு தீ அவர் மீது பரவியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
குறித்த சடலத்தை பிரேத பரிசோதனைக்கு வைத்தியசாலைக்கு ஒப்படைப்பதற்காக நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.



