சுதந்திர கட்சியை விட்டு வெளியேறப் போவதில்லை
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை விட்டு தாம் வெளியேறப் போவதில்லை என கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஞாயிறு பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எவ்வாறான துரோகங்கள் இழைக்கப்பட்டாலும் தாம் கட்சியை விட்டு வெளியேறப் போவதில்லை என கூறியுள்ளார்.
ஒழுக்காற்று விசாரணை
சில சூழ்ச்சியாளர்கள் நிறைவேற்று சபையின் பூரண அனுமதியின்றி தம்மை பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் கட்சி உறுப்புரிமையிலிரந்தும் நீக்கி உள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனினும் எவ்வாறான விரோதங்கள் இருந்தாலும் எவ்வாறான ஒழுக்காற்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டாலும் கட்சியை விட்டு தாம் விலகப் போவதில்லை என அவர் மேலும், தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் கைகோர்த்து செயற்பட போவதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்திய விமானப்படைத் திறனை அதிகரிக்க மாற்று திட்டம்., F-35, Su-57E போர் விமானங்களை தவிர்க்க வாய்ப்பு News Lankasri

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி.. 45 நிமிடத்திற்குள் அனிருத்தின் #Hukum புதிய சாதனை Cineulagam
