கொரோனா தொற்றுக்குள்ளான தயாசிறி ஜயசேகர குணமடைந்து வீடு திரும்பினார்!
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
எனினும், அவர் மேலும் ஒரு வாராம் வீட்டில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது குறித்து இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தனது டுவிட்டர் பக்கதில் பதிவொன்னை இட்டுள்ளார்.
[GGEIJW ]
கடந்த 8ம் திகதி தயாசிறி ஜயசேகரவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ஹிக்கடுவ பகுதியில் உள்ள சிகிச்சை நிலையத்தில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
தயாசிறி ஜயசேகரவை தொடர்ந்து அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் மற்றம் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த ஆகியோருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், கொக்கல சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வரும் ரவூப் ஹக்கீம், வழக்கமாக சோதனை செய்யும் மையத்தில் உள்ள மருத்துவ ஊழியர்களின் புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
The evening sunset from my quarantine facility in Koggala and the routine check on my temperature and oxygen levels in the lungs. Masha Allah doing well so far. 3 more days for the boredom to end. pic.twitter.com/N5P6FUzIpn
— Rauff Hakeem (@Rauff_Hakeem) January 20, 2021