குற்றச்சாட்டை மறுக்கும் தயாசிறி
6 லட்சம் ரூபாவுக்கு அதிகமான மின்கட்டணத்தை செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை முன்னாள் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, மறுத்துள்ளார்.
தனது வசிப்பிடத்திற்காக பெற்ற பயன்பாட்டுக் கட்டணங்களின், நிலுவையானது, முன்னாள் அமைச்சர்களான ரிச்சர்ட் பத்திரன மற்றும் அதாவுட சென்விரத்ன ஆகியோரின் பெயரில் உள்ளவை என அவர் தெரிவித்துள்ளார்.
மின்சார சபை அதனை சரி செய்யத் தவறியுள்ளது
குறித்த வீட்டுக்கான தனது பயன்பாட்டு கட்டணங்களை சரியான நேரத்தில் செலுத்தியதாக அவர் நாடாளுமன்றத்தில் கூறினார்.
தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கான மின்சாரக் கட்டணம் தனது பெயருக்குக் கூட எழுதப்படவில்லை எனவும், பலமுறை கோரிக்கை விடுத்தும் இலங்கை மின்சார சபை அதனை சரி செய்யத் தவறியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது வீட்டின் கட்டண்ணத் தொகையை தொகையை மூன்று அமைச்சக்கள் செலுத்தியிருக்க வேண்டும் என்றும், எனவே அவற்றைத் தீர்த்து வைக்குமாறு, தாம் அந்த அமைச்சுக்களுக்கு கடிதம் எழுதியதாகவும் அவர் கூறினார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 11 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam
