இலங்கை மின்சார சபையிடமிருந்து தயாசிறி ஜயசேகரவிற்கு சென்ற கடிதம்!
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் மின்சார கட்டண நிலுவையான 637,448.38 ரூபாவை செலுத்துமாறு இலங்கை மின்சார சபை அவருக்கு அறிவித்தல் அனுப்பியுள்ளது.
இந்த கடிதம் செப்டெம்பர் 29 ஆம் திகதி இல.12, கிரிகோரி வீதி, கொழும்பு 7 இல் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு பதிவு தபாலில் அனுப்பப்பட்டுள்ளது.

மின்சார சபை பிறப்பித்த உத்தரவு
அந்த கடிதத்தில் 2016 ஆம் ஆண்டு அமைச்சரிடம் வசிப்பிடத்தை கையளிக்கும் போது 494,739.69. ரூபாய் நிலுவையாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் 2022 ஆகஸ்ட் வரையான மொத்த நிலுவைத் மின்சார பயன்பாட்டு கட்டணமாக 637,448.38. ரூபாவை செலுத்தவேண்டும் என்று மின்சார சபை தெரிவித்துள்ளது.
எனவே மின்சார துண்டிப்பை தவிர்ப்பதற்காக ஒக்டோபர் 15ஆம் திகதிக்குள் மொத்தக்
கொடுப்பனவுகள் செலுத்தப்பட வேண்டும் என்று மின்சார சபை, தமது கடிதத்தில்
அறிவுறுத்தியுள்ளது.
அலி கமெனியின் இறுதி ஊர்வலத்தை சீர்குலைக்க முயற்சிக்கும் அமெரிக்கா! பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ள ஈரான்
பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார்..! தொழிற்கட்சியின் தலைமைப் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்
கோட்டாபய விரட்டப்பட்டு 4 வருடங்கள் - ஜனாதிபதி மாளிகையில் இருந்த பெறுமதியான பொருட்களை திருடியது யார்..!
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam