அவுஸ்திரேலியாவில் பாலியல் சர்ச்சையில் சிக்கியிருந்த இலங்கை வீரருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியிருந்த இலங்கை வீரர் எந்தத் தப்பும் செய்யவில்லை என அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவை அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவுஸ்திரேலிய நீதிமன்றம் விடுவித்துள்ளது.
சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சாரா ஹகெட் இந்த தீர்ப்பினை வழங்கியிருந்தார்.
தனுஷ்க குணதிலக
தனுஷ்க குணதிலக, டிண்டர் என்ற சமூக ஊடக செயலி மூலம் தான் சந்தித்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
கடந்த 21ஆம் திகதி சிட்னியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் தனுஷ்கவின் வழக்கு விசாரணை முடிவடைந்தது.
இந்நிலையில், இன்று (28) அதன் தீர்ப்பை அறிவித்த நீதிமன்றம் தனுஷ்க குணதிலக்கவை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
