பூட்டியிருந்த வீட்டை பார்வையிட வந்த உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி
மத்தேகொட பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் அஞ்சல் பெட்டியிலிருந்து 47 T-56 தோட்டாக்களும் 9 மில்லிமீட்டர் துப்பாக்கி ரவைகளும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தற்போது வேறொரு இடத்தில் வசிக்கும் குறித்து வீட்டின் உரிமையாளரால் வழங்கப்பட்ட இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெடி மருந்துகள் கண்டுபிடிப்பு
வீட்டின் உரிமையாளர் நேற்று (08) பூட்டியிருந்த வீட்டை பார்வையிட வந்தபோதே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த வீட்டின் அஞ்சல் பெட்டி பாதுகாப்பாக பூட்டுப்போடப்பட்டிருப்பதை அவதானித்த உரிமையாளர் அயலவர்களின் உதவியுடன் அதனை திறந்துபார்த்தபோது இந்த வெடி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் மத்தேகொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 4 நாட்கள் முன்

20 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன இளம் பெண்: பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட எச்சங்கள் News Lankasri

வீட்டைவிட்டு கிளம்பும் முன் கோமதிக்காக மீனா செய்த காரியம், ஆனால் செந்தில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
