நுவரெலியாவில் ஆபத்தான தொடருந்து கடவை: பொதுமக்கள் விசனம்
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லிகைப்பூ சந்தியில் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் குறுக்கே அமைந்துள்ள தொடருந்து கடவையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த இடத்தில் மழை நேரங்களில் மோட்டார் சைக்கிள்களும் முச்சக்கர வண்டிகளும் வழுக்குவதால் விபத்துக்கள் ஏற்படுவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இந்த பகுதியில் உள்ள வீதி, தாழிறங்கிய நிலையில் இருப்பதால் தண்டவாளங்கள் மேலெழுந்துள்ளன.
பொதுமக்கள் கோரிக்கை
இதேவேளை, நேற்று (24.10.2025) காலை வேளையிலும் ஒருவர் விழுந்து சிறிய காயங்களுக்கு உள்ளானதுடன் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளுக்கும் சிறியளவில் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த இடத்தில் வாரமொன்றில் இரண்டு பேராவது விழுந்து காயமடைவதாக அயலில் வசிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
பெரும்பாலான அரச ஊழியர்கள் குறிப்பாக பெண்கள், இந்த இடத்தில் மழை நேரங்களில் அவசர அவசரமாக கடப்பதனால் விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் பலர் கூறுகின்றனர்.

குறித்த இடத்தில் அதிகமான விபத்துக்கள் ஏற்படுவதனால் உயிராபத்து ஏற்படுவதற்கு முன் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |