இந்தியாவிற்கு காத்திருக்கும் ஆபத்து! அமெரிக்க உளவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கை
பாகிஸ்தான் அணு ஆயுதங்களை நவீனப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ‘லெப்டினன்ட் ஜெனரல் ஸ்காட் பேரியர்’ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா நாடாளுமன்றத்தின் ஆயுதப்படை தொடர்பான செனட் குழு கூட்டத்தில், இந்தியா -பாகிஸ்தான் உறவு குறித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் இந்தியா – பாகிஸ்தான் உறவு மோசமாகியிருக்கிறது.
இந்தியாவின் அணு ஆயுதங்கள், இராணுவ பலத்தை பார்க்கும் பாகிஸ்தான், தங்கள் நாட்டு அணு ஆயுதங்களை முக்கியமாக கருதுகின்றது எனவும் இதன்போது தெரிவித்துள்ளார்.
மேலும், 2019 புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் இந்தியா, பாகிஸ்தான் உறவு மோசமாகியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவின் அணு ஆயுதங்கள், இராணுவ பலத்தை பார்க்கும் பாகிஸ்தான், தங்கள் நாட்டு அணு ஆயுதங்களை முக்கியமாக கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கு போட்டியாக பாகிஸ்தான் தனது இராணுவத்துக்கு பயிற்சியை வழங்கி வருகிறது எனவும், இது நிலைமையை மேலும் மோசமாக்கலாம் எனவும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரி கூறியுள்ளார்.

வீட்டைவிட்டு வெளியே போன மீனா, விஜயாவிற்கு ஷாக் கொடுத்த முத்து.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

ரஷ்யா, சீனாவுடன் ஆயுதப்போட்டி ஏற்படும் அச்சம்: அதிர்ச்சியூட்டும் உத்தரவை பிறப்பித்த செயலாளர் News Lankasri
