இலங்கையில் இந்து மதத்தின் இருப்புக்கு பேராபத்து! மோடிக்கு பறந்த கடிதம் - செய்திகளின் தொகுப்பு
இலங்கையில் இந்து மதத்துக்கும், அதன் பாரம்பரியத்துக்கும் ஆபத்தும் அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏழு புலம்பெயர் அமைப்புகள் இணைந்து கடிதம் எழுதியுள்ளன.
அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டதாவது, ‘‘இலங்கை அரசாங்கம் தனது இராணுவத்தின் உதவியுடன் இலங்கையின் வடக்கு - கிழக்கில் இந்து கலாசாரம், பாரம்பரியம், ஆலயங்கள் ஆகியவற்றை இலக்கு வைக்கிறது.
இலங்கையின் வடபகுதியில் அதிகளவு மதிப்புக்குரியதாகக் காணப்படும் கீரிமலை பகுதியில் காணப்பட்ட ஐந்து நூற்றாண்டுகால வரலாற்றைக் கொண்டுள்ள ஆதிசிவன் ஆலயம் இராணுவ ஆக்கிரமிப்பு என்ற போர்வையில் அழிக்கப்பட்டுள்ளதை ஆழ்ந்த கரிசனையுடனும் அவசரத்துட னும் நாங்கள் உங்களுக்குத் தெரியப்படுத்துகின்றோம்‘‘ என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவை தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மாலை நேர செய்திகளின் தொகுப்பு,



