கையடக்க தொலைபேசியில் பதிவு செய்து கொண்டு உயிரிழந்த மாணவி
தென்னிலங்கையில் வீடு ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் மாணவி ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த 16 வயதுடைய சிறுமியின் பிரேத பரிசோதனை காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்த சிறுமி உடுகம, கல்லந்தல பிரதேசத்தில் தனது தாய் மற்றும் சகோதரியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
வீட்டின் அறையில் இருந்த சிறுமி சாறி ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவர் இந்த தீர்மானத்தை எடுப்பதற்கு முன்னர் சாறியில் தூக்கிட்டு தயார்ப்படுத்தும் வகையில் சில புகைப்படங்கள் அவரது கையடக்க தொலைபேசியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மாணவி கையடக்க தொலைபேசி பாவனைக்கு கடுமையாக அடிமையாகியிருந்தார் என தெரியவந்துள்ளது. அத்துடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்ளும் வகையிலான காட்சியையும் அவர் கையடக்க தொலைபேசியில் காணொளியாக பதிவிட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri