கல்கிஸ்ஸ கடற்கரையில் குவியும் மக்களால் ஆபத்து
கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக நீண்ட பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது இந்த கட்டுப்பாடு நீக்கப்பட்டுள்ள நிலையில் மாலை நேரங்களில் கல்கிஸ்ஸ கடற்கரையில் பெருமளவு மக்கள் குவித்துள்ளன. அவர்களில் பலர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்படுவதாக தெரியவந்துள்ளது.
குறித்த மக்களில் அதிகமானோர் முகக் கவசம் அணியாமல் ஒரு மீற்றர் இடைவெளியை பின்பற்றாமல் கடற்கரையில் நேரம் செலவிடுவதனை காண முடிந்துள்ளது.
கல்கிஸ்ஸ கடற்கரையில் அதிகமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் காணப்படுகின்ற நிலையில் இந்த காலப்பகுதியில் அதிகமாக உள்நாட்டு பயணிகளே காணப்படுவதாக தெரியவந்துள்ளது.
சுகாதார விதிமுறைகளை மீறி செயற்படும் சுற்றுலா பயணிகளால் மற்றுமொரு கொவிட் அலை உருவாகும் அபாயம் உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.



நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25