குழந்தைகளுக்கு பால் புகட்டும் போத்தல் தொடர்பில் ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்(Video)
குழந்தைகளுக்கு பால் புகட்ட பயன்படுத்தப்படும் போத்தல்கள் மற்றும் குழந்தைகளுக்கு உணவு வழங்க பயன்படுத்தப்படும் சில கொள்கலன்களில் பிஸ்பெனால் ஏ எனப்படும் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் உள்ளது என அண்மைய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, இலங்கை, பங்களாதேஷ், சீனா, பூட்டான், மலேசியா, இந்தோனேசியா, ரஸ்யா மற்றும் தன்சானிய போன்ற நாடுகளில் இருந்து குழுந்தைகளுக்கு உணவு வழங்கும் கொள்கலன்களின் மாதிரிகள் பெற்றுக் கொள்ளப்பட்டன.
ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும் மலேசியா, சீனா மற்றும் இந்தோனேஷியாவும் ஏற்கனவே இவ்வாறான ரசாயன பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளன.
இதேவேளை, இலங்கையில் பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் பிஸ்பெனோல் ஏ கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும் தயாரிப்புகள் இன்னும் பயன்பாட்டில் இருப்பதாக சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சலனி ரூபசிங்க தெரிவித்தார்.
Bisphenol A என்பது புற்றுநோய்க்கு கூடுதலாக, இனப்பெருக்க அமைப்பின் செயலிழப்பை ஏற்படுத்தும் ஒரு இரசாயனமாகும், இது பாலியல் தொடர்பான பாதிப்புகள் மற்றும் நீரிழிவு போன்ற பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
மேலும், இது ஹார்மோன் செயல்பாட்டில் தலையிடுவதாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தெரிவித்துள்ளன.
உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் இதை அபாயகரமான இரசாயனமாக சட்டப்பூர்வமாக்கியுள்ளன.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
