சீனாவால் இலங்கை அரசுக்கு காத்திருக்கும் ஆபத்து! இந்தியாவின் அடுத்த நகர்வு
இலங்கை தொடர்பான தனது உறவை முழுமையாக தீர்மானிக்கும் வரை இந்தியா தனது எதிர்ப்பை அமைதியாகவே வெளிக்காட்டும் என தாய் தமிழகத்தில் இருக்கக்கூடிய மூத்த பத்திரிக்கையாளரும்,சிரேஸ்ட அரசியல் ஆய்வாளருமான ஐயநாதன் தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு அரசியல் நிகழ்ச்சிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது இலங்கையில் சீனா தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றமை தொடர்பில் இந்தியாவை பொருத்த வரையில் மௌனமான உரசலாகவே உள்ளது.
மோதலாக வெளிப்படவில்லையே தவிர இந்த உராய்வு மிக அழுத்தமாகவே சென்றுக்கொண்டிருக்கின்றது.
சீனாவை பொருத்த வரை ஏனைய நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை பயன்படுத்தி தனது பலத்தினை கொண்டு கைப்பற்றக்கூடிய வல்லமை கொண்டது.
எனவே இலங்கை மீதான சீனாவின் முழுமையான ஆதிக்கத்தின் பின்னரே இந்தியா தனது நிலைப்பாட்டை அறிவிக்கும்.
இந்திய - சீன எல்லை மோதல் பிரச்சினை எதிர்க்காலத்தில் வெடிக்க கூடியவை. இதன் காரணமாக இந்தியா அமைதியாக சில காய்களை நகர்த்தி வருகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.