இலக்கு வைக்கப்பட்ட மகிந்தவின் முக்கிய சகா டேன் பிரியசாத்-அடுத்தது யார்..! கதி கலங்கும் பின்னணி- பீதியில் நாமல்
இலங்கையில் இந்த இரண்டு நாட்களில் அதிகமானோரால் உச்சரிக்கப்பட்ட ஒரு பெயராக டேன் பிரியசாத்தின் பெயர் மாறியுள்ளது.
அவரின் மரணம் தொடர்பில் பல சர்ச்சைகள் எழுந்திருந்த நிலையில், டேன் பிரியசாத் யார்? அவரின் பின்னணி என்ன, ஏன் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பல குற்றசெயல்களில் ஈடுபட்டு வந்துள்ள டேன் பிரியசாத் கோட்டாபய ராஜபக்சவிற்கு ஆதரவாகவே தமது கருத்துக்களையே அரகலய போராட்டத்தின் போதும் கூறிவந்துள்ளார்.
இந்தநிலையில் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் அவருக்கு நெருக்கமானவர்கள் மீதான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் டேன் பிரியசாத், மற்றையவர் சிங்கள பாடகர் இராஜ் வீரரத்ன. அவரை குற்றப்புலனாய்வுதிணைக்களத்திற்கு விசாரணைக்கு அழைத்த போது, டேன் பிரியசாத்தும் உடன் சென்றிருந்தார்.
மகிந்த ராஜபக்சவிற்கு நெருக்கமாக இருந்த சாரதியான அருண விதாகனகே என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தை மித்தெனிய முக்கொலையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
அவரையும் குற்றப்புலனாய்வுதிணைக்களத்திற்கு விசாரணைக்கு அழைத்திருந்தார்கள் அதனை தொடர்ந்து அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தற்போது டேன் பிரியசாத்தும் குற்றப்புலனாய்வுதிணைக்களத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார் தற்போது படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தற்போது மீதவுள்ள ஒருவர் இராஜ் வீரரத்ன ஒருவரே .அவர் மட்டுமே குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு விசாரணைக்கு சென்று தற்போது வரை உயிருடன் உள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
