தொழில் அதிபர் தம்மிக்க பெரேராவுக்கு எதிரான மனுக்கள் நிராகரிப்பு!
அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் நிராகரிப்பு
விரைவில் பதவியேற்பார்! தொழில் அதிபர் தம்மிக்க பெரேரா, நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 5 அடிப்படை உரிமைமீறல் மனுக்களையும் உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
அவரை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பதற்கு எதிராக பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
நேற்று இந்த மனுக்கள், அழைக்கப்பட்டன. இன்று அந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
தம்மிக்க பெரேராவின் அறிவிப்பு
முன்னதாக தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பில் தீர்மானம் வரும்வரையில் தாம், நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கப்போவதில்லை என்று தம்மிக்க பெரேரா நீதிமன்றத்துக்கு நேற்று அறிவித்திருந்தார்.
இந்தநிலையில் தற்போது, தமக்கு சாதகமான தீர்மானம் வந்துள்ளதை அடுத்து அவர், நாளைய தினம், நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பசில் ராஜபக்ச பதவி விலகிய நிலையிலேயே தம்மிக்க பெரேரா அந்த இடத்துக்கு பொதுஜன பெரமுனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்