மகிந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க, பிரதமராக நாமல்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP), தனது ஜனாதிபதி வேட்பாளராக தொழிலதிபர் தம்மிக்க பெரேராவை (Dhammika Perera) எதிர்வரும் திங்கட்கிழமையன்று பரிந்துரைக்கும் என ராஜபக்சவின் விசுவாசியும், முன்னாள் இராஜதந்திரியுமான உதயங்க வீரதுங்க (Udayanga Weerathunge) தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில், கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksha) பிரதமராக நியமிக்கப்படுவார் என்றும் அவர் கூறியுள்ளார்.
எனினும், இது தொடர்பாக கட்சியின் உத்தியோகபூர்வ தகவல்கள் எவையும் இதுவரை வெளியாகவில்லை.
தேர்தலுக்கான அறிவிப்பு
2024ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் திகதியன்று, இலங்கையில் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும் என இலங்கை தேர்தல் ஆணையகம் (Election Commision of Sri Lanka) நேற்று (26.07.2024) அறிவித்தது.
அத்துடன், தேர்தலுக்கான வேட்புமனுக்கள், 2024 ஆகஸ்ட் 15ஆம் திகதியன்று ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் இலங்கை தேர்தல் ஆணையம் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டது.
தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம், 2024 நவம்பர் 17 அன்று முடிவடைகிறது.
அத்துடன்,ப தவியில் இருக்கும் ஜனாதிபதியின் பதவிக் காலம் முடிவடைவதற்கு ஒரு மாதத்திற்குக் குறையாமலும் இரண்டு மாதங்களுக்கு முன்னரும் தேர்தல் நடைபெற வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் இந்த தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |