தம்மிக பெரேரா அமைச்சராக பதவிப்பிரமாணம்
தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக பெரேரா இன்று அமைச்சு பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து ஏற்பட்ட தேசியப்பட்டியல் வெற்றிடத்துக்கு தம்மிக பெரேரா நியமிக்கப்பட்டிருந்தார்.
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு பொறுப்பேற்பு
கடந்த புதன்கிழமை காலை சபாநாயகர் முன்பாக நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட அவர், இன்று முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இந்தப் பதவியேற்பு வைபவம் நடைபெற்றுள்ளது.
மஹிந்த ராஜபக்சவின் இரண்டாம் தவணை ஜனாதிபதி பதவிக்காலத்தில் தம்மிக பெரேரா முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri