நாளை பதவியேற்கும் தம்மிக்க பெரேரா
பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா நாளை தினம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினராக, சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்துக்கொள்ள உள்ளார்.
அத்துடன் தம்மிக்க பெரேரா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராகவும் பதவியேற்க உள்ளார். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, தம்மிக்க பெரேரா, பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளார்.
தம்மிக்க பெரேரா, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து அமைச்சின் செயலாளராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தம்மிக்க பெரேரா, இலங்கையில் உள்ள கசினோ உட்பட பல வர்த்தகங்களின் உரிமையாளர்.

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri

எங்கள் நாட்டில் உன்னை பணக்காரர் ஆக விடமாட்டேன்: புலம்பெயர்ந்தோர் ஒருவர் ஜேர்மனியில் சந்தித்த அதிர்ச்சி News Lankasri
