திருமணத்திற்குச் சென்ற பெண் கோர விபத்தில் பலி
திருமண நிகழ்வொன்றுக்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண் ஒருவர் விபத்தில் சிக்குண்டு உயிரிழந்த சம்பவம் தம்புள்ளை பிரசேத்தில் பதிவாகியுள்ளது.
தம்புள்ளை(Dambulla) - ஹபரணை வீதியில் திகம்பத்தஹ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இந்த பெண் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
ஹபரணை - ஹிரிவடுன்ன பிரதேசத்தில் வசித்து வந்த சந்தியா குமாரி என்ற 44 வயதுடைய பெண்ணே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தம்புள்ளையில் இருந்து ஹபரணை நோக்கி பயணித்த கெப் வண்டியொன்று அதே திசையில் பயணித்த காரை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர் திசையில் இருந்து வந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த கெப் வண்டியில் பயணித்த பெண் ஹபரணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
உயிரிழந்த குறித்த பெண் மேலும் சிலருடன் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு மீண்டும் வீடு திரும்பும் போது இந்த விபத்து நேர்ந்துள்ளதாகவும், இதன்போது மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
படுகாயமடைந்த இருவரில் மூன்று வயது சிறுமி ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை சீகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri